ஆந்திராவில் பிடிக்கப்பட்ட 186 சென்னை மீனவர்கள் விடுதலை
சென்னை: ஆந்திர கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த 186 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்த 186 மீனவர்கள் கடந்த 7ம் தேதி காசிமேடு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க 26 விசைப் படகுகளில் சென்றனர்.
அவர்கள் ஆந்திர கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அதிக கடல் சீற்றம் இருந்ததால், அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகப் பகுதிக்குள் நுழைந்து விட்டனர்.
உடனே துறைமுகத்தில் இருந்த கடலோர காவல் படையினர் அத்துமீறி துறைமுகப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி 186 மீனவர்களையும் கைது செய்து, அவர்களுடைய விசைப்படகுகள், மீன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி உடனே காசிமேடு பகுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பகுதியில் உள்ள விசைப்படகு உரிமையாளர்கள் மீனவர் சங்கத் தலைவர் ரகுபதி உதவியுடன், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரை கே.பி.பி.சாமியை சந்தித்து முறையிட்டனர்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காக்கிநாடா துறைமுக அதிகாரிகளுடன், மாநில மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நேற்று மதியம் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications