சட்டவிரோதமாக தங்கியிருந்த பாக். பெண் விருத்தாச்சலத்தில் கைது
விருத்தாசலம்: சுற்றுலா விசாவில் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து விருத்தாச்சலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள பாதூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் இவரின் சொந்த ஊர் விருத்தாசலம் அருகேயுள்ள முகாசபரூர் ஆகும்.
இவரது உறவுப் பெண் முத்துலட்சுமி. இவர் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர். இவரை கடந்த 1980ம் வருடம் இந்தியாவுக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்டார் ராமலிங்கம்.
இத் தம்பதிக்கு தனஞ்செயன் (26), செல்வகுமார் (16) என்ற இரு மகன்களும், விஜயலட்சுமி (23), ஜான்சிராணி (18) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
ராமலிங்கம், முத்துலட்சுமி தம்பதியினருக்கிடையே கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற முத்துலட்சுமி விருத்தாசலத்தில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர் விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம் தனது விசா காணாமல் போய் விட்டதாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்த முத்துலட்சுமி தனது விசாவை புதுப்பிக்காமல் ராமலிங்கத்தை திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications