புலிகள் எதிர்ப்பு இலங்கை தமிழ் எம்பிக்கள் டெல்லி வருகை
டெல்லி: இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் எம்.பிக்கள் அனந்தசங்கரி, ஸ்ரீதரன், டி.ஸ்ரீதரன் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியத் தலைவர்களை சந்திக்கன்றனர்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த அனந்த சங்கரி, தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் டி.ஸ்ரீதரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்ரீதரன் ஆகியோர் இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் எம்.பிக்கள் ஆவர்.
கடந்த வருடம் மூன்று பேரும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அப்போது விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்போது அவர்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது 3 பேரும் மீண்டும் டெல்லி வந்துள்ளனர். மூன்று பேரையும் இந்திய அரசு அழைக்கவில்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட முறையில், வந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
டெல்லியில் முக்கியத் தலைவர்களை சந்தித்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையை 3 பேரும் வைக்கவுள்ளதாக தெரிகிறது. சென்னைக்கும் இவர்கள் வரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
மூன்று கட்சிகளைச் சேர்ந்த இந்த எம்.பிக்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரமாக செயல்படுபவர்கள். இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள இடைக்கால மாகாண கவுன்சிலில் அனந்த சங்கரிக்கு முக்கியப் பதவி கொடுக்க அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அனந்த சங்கரி தலைமையில் 3 எம்.பிக்கள் டெல்லி வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், மூன்று கட்சிகளும், இந்தியாவில் உள்ளதைப் போன்ற அரசு நிர்வாகத்தை இலங்கையிலும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே கருத்தையே இந்திய அரசும் வலியுறுத்தி வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் புலிகளுக்கு எதிர்ப்பான, இலங்கை அரசுக்கு ஆதரவான மூன்று முக்கிய கட்சிகளின் எம்.பிக்கள் டெல்லி வந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications