முதல்வர் அலுவலக அதிகாரி வீட்டில் கொள்ளை
சென்னை: சென்னையில் முதல்வர் அலுவலக அதிகாரியின் வீட்டிலேயே துணிகர கொள்ளை நடந்துள்ளது.
சென்னையில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர் சக்கரபாணி ரெட்டியாரின் உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் 250 பவுன் நகைகள், ரூ. 30 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை நகருக்குள்ளேயே துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை போன வீட்டில் வசித்து வருபவர், முதல்வர் அலுவலக தனிப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.
ராஜேஷ் தனது குடும்பத்தினருடன், கோயம்பேடு, தெற்காசிய விளையாட்டு கிராம குடியிருப்பில் வசித்து வருகிறார். ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் போயிருந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சிலர் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்கு முன்பாக அக்கம் பக்கத்து வீடுகளின் கதவுகளை வெளியில் இருந்தபடி பூட்டி விட்டனர்.
உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணம், 4 பாஸ்போர்ட்டுகள், பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு சென்று விட்டனர்.
முதல்வர் அலுவல அதிகாரியின் வீட்டிலேயே கொள்ளை நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications