கிறிஸ்துமஸ்: மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெ. வாழ்த்து
டெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மனமோகன் சிங் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்துவின் சகோதரத்துவம், தியாகம், பொறுமை ஆகிய செய்திகளை கொண்டாடும் திருநாள் கிருஸ்துமஸ்.
கிறிஸ்துவின் போதனைகளை அனைவரும் உள்வாங்கிக் கொண்டு அதை செயல்படுத்த இந்த தருணத்தில் உறுதி பூண வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சகோதரத்துவம், அன்பு, தியாகம், அமைதி, ஒற்றுமை உலகெங்கும் பரவ இந்த பண்டிகை உதவட்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிறுபான்மையினரின் உண்மையான நண்பனாக திமுக அரசு விளங்குகிறது. கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த அரசுதான் அளித்தது.
அன்பே அனத்திற்கும் அடிப்படை என்று போதித்தவர் இயேசு பிரான். அதேபோல கிறிஸ்தவர்களும் எளிமை, மன்னிக்கும் குணம், உதவும் குணத்திற்குப் பெயர் போனவர்கள்.
இயேசு பிரான் போதித்த அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவை பரவ உறுதி பூணுவோம். சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளை அகற்றவும், ஏழைகளின் உயர்வுக்குப் பாடுபடவும் உறுதி மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொருவருக்குள்ளும், சகோதரத்துவும், சமூக ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை இந்த நாளில் உருவாக்கிக் கொள்வோம்.
கிறிஸ்தவர்களின் வாழ்வில் இருள் நீங்கி வெளிச்சம் பரவ இந்த நாள் உதவட்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications