மதுரை அருகே பெண் சிசுக் கொலை - போலீஸில் புகார்
மதுரை: மதுரை அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கொல்லப்பட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகப்பேறு நல அதிகாரி எஸ்.வசந்தி இதுதொடர்பாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்துள்ளார்.
அதில், விக்கிரமங்கலம் அருகே உள்ள காளிக்கண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி வளர்மதி. இவருக்கு மதுரை தேம்பாவனி மருத்துவமனையில் டிசம்பர் 12ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தபோது அதன் எடை 3.15 கிலோவாக இருந்தது. நல்ல நலத்துடன் இருந்த அந்தக் குழந்தை டிசம்பர் 17ம் தேதி மரணமடைந்தது.
நல்ல நலத்துடன் இருந்த குழந்தை இறந்திருப்பதால் அதன் சாவில் சந்தேகம் வருகிறது. குழந்தை இறந்ததும் உடனடியாக அதை பெற்றோர் எரித்து விட்டனர்.
எனவே இதுகுறித்து விசாரித்து அந்தக் குழந்தை இயற்கையாக இறந்ததா அல்லது கொல்லப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விக்கிரமங்கலம் பகுதியில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. விஷ விதைகளைக் கொத்தும், நெல் விதைகளை மூக்கில் திணித்தும் குழந்தைகளைக் கொல்வதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருவது நினைவிருக்கலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications