புத்தாண்டு: சென்னை திருப்பதி கோவிலில் 1 லட்சம் லட்டு வழங்க ஏற்பாடு

சென்னை: புத்தாண்டையொட்டி சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதேபோல சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சம் லட்டுக்களை தயாரித்து வைத்துள்ளனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனைக் குழு பொறுப்பாளர் அனந்தகுமார் ரெட்டி கூறுகையில், ஜனவரி 1ம் தேதியன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு தரப்படும். இதற்காக 1 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு இலவசமாக லட்டு தருவது இதுவே முதல் முறையாகும்.
இதுதவிர சிறப்பு கவுண்டர்கள் மூலமும் லட்டுக்கள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புக்கும் காவல்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
புத்தாண்டையொட்டி அதிகாலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை கோவில் திறந்திருக்கும் என்றும் ரெட்டி தெரிவித்தார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications