மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மாயாவதி

டெல்லி: தனக்கு கமாண்டோ பாதுகாப்பு தராவிட்டால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வரும் 15ம் தேதிக்கு பின்னர் வாபஸ் பெறப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி எச்சரித்துள்ளார்.
மாயாவதி கூறுகையில்,
பயங்கரவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்படலாம். ஒரு வேளை நான் கொலை செய்யப்பட்டால் அதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் முழு பொறுப்பேற்க வேண்டும். என் உயிருக்கு தொடர் மிரட்டல் இருப்பதால் எனக்கு எஸ்.பி.ஜி. படை பாதுகாப்பு வேண்டும்.
இந்த பாதுகாப்பை தரும்படி நான் பலமுறை மத்திய அரசிடம் கேட்டுவிட்டேன். ஆனால் எனக்கு பாதுகாப்பு தர மறுக்கிறார்கள். அதே சமயத்தில் என்னைக் கொல்ல நினைக்கும் அதீக் அகமதுவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கிறது. சில காங்கிரஸ் கட்சியினர் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்.
இதே நிலை நீடித்தால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சி வரும் 15ம் தேதிக்கு பின்னர் விலக்கிக் கொள்ளும் என கூறியுள்ளார்.
தனது மாநிலத்துக்கு உரிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குஜராத், ஹிமாச்சலில் காங்கிரசின் வாக்குகளைப் பிரித்து அக் கட்சியின் படுதோல்விக்கு மாயாவதி வழி வகுத்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் 30 முதல் 35 இடங்களில் மாயாவதியின் கட்சி பெற்ற வாக்குகளால் காங்கிரஸ் தோற்றுள்ளது. ஹிமாச்சலில் பகுஜன் சமாஜ் 7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அங்கு 1.7 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜகவிடம் காங்கிரஸ் தோற்றது என்பது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மாயாவதி கூறியுள்ளார்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வெங்காய விவசாயிகளுக்கு நற்செய்தி! கொள்முதல் விலையை உயர்த்திய மத்திய அரசு.. இன்று முதல் அமலாகிறது! -
ஜூன் 30 முதல் ரூபாய் நோட்டுகள் செல்லாது? பீதியைக் கிளப்பும் வாட்ஸ்ஆப் மெசேஜ்! உண்மை என்ன தெரியுமா? -
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்










Click it and Unblock the Notifications