கிராமத்து பொங்கலை கண் முன் நிறுத்திய நெல்லை மாணவர்கள்
நெல்லை: லை குடிசை, மாட்டு வண்டி, சரசரக்கும் பட்டு வேட்டி, பாவடை சட்டையுடன் பொங்கல் வைத்து, நெல்லை, பாளையங்கோட்டை புஷ்ப லதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வித்தியாசமாக கொண்டாடிய பொங்கல் விழா வெகுவாக கவர்ந்தது.
தங்களுக்கு உதவிய இயற்கைக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அதற்கு விளை பொருட்களை படைத்து வணங்கும் மண்வாசனை கொண்ட திருநாள் தைபொங்கல்.
இந்த திருநாளில் கிராமத்து வாசிகள் உற்சாகமாக ஜாதி, மத போதமின்றி மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை பகிர்த்துக் கொள்வார்கள்.
இதே பாணியை கையாண்ட பாளை புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வாளகத்தில் ஓலை குடிசை அமைத்தனர். மைதானம் முழுவதும் வண்ண கோலமிட்டனர்.
ஆங்கங்கே கரும்புகளால் தோரணம் கட்டினர். மேலும் ராஜகோபாலபுரத்தில் உள்ள பெருமாள் என்ற விவசாயியை குடும்பத்துடன் அழைத்தனர். அவரும் மாட்டு வண்டி சகிதம் வந்து இறங்கினார்.
இதற்குதான் காத்திருந்தது போல் பட்டு வேஷ்டி, பாவடை சட்டையுடன் இருந்த மாணவ, மாணவிகள் ஆட்டம் பாட்டம் என்று விவசாயியுடன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
அவர்கள் உற்சாகத்தில் பள்ளி நிர்வாகி மரகதவள்ளி, தாளாளர் புஷ்ப லதா பூரணன் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்களும் பங்கெடுத்தனர்.
ஆதிதமிழனிடம் இருந்த ஜாதி, மத பேதமற்ற ஒற்றுமை மாணவர்கள் கொண்டாடிய பொங்கல் திருவிழாவிலும் காண முடிந்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications