பொங்கல்-கரகம் ஆடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!
Subscribe to Oneindia Tamil
பழனி: திண்டுக்கல்லில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கரகம் எடுத்து ஆடி கலக்கினர்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினர்.
இந்த விழாவில் சீனா, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சில பயணிகள் நாதஸ்வரம் வாசித்தனர். ஒரு பெண் கரகத்தை தலையில் சுமந்தபடி நளினமாக நடனமாடினர்.
அவர்களுக்கு பானை உடைக்கும் போட்டி உள்பட பல போட்டிகள் வைக்கப்பட்டன. இங்கிலாந்தை சேர்ந்த கெய்ட் என்ற பெண்மணி பானையை உடைத்து முதல் பரிசை தட்டி சென்றார்.












Click it and Unblock the Notifications