புலிகள் உளவாளி கைது-வரதராஜ பெருமாளை கொல்ல திட்டம்
சென்னை: வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜபெருமாள் உள்ளிட்டோரைக் கொல்லும் திட்டத்துடன் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உளவாளியான தம்பித்துரை பரமேஸ்வரன் என்பவர் உள்பட 8 இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகத்திற்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவி விடாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புலிகள் இயக்கத்தின் முக்கிய உளவாளியான தம்பித்துரை பரமேஸ்வரன் என்கிற சுருளி சென்னையில் ஊடுறுவியிருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து டெல்லி போலீஸார் சென்னை போலீஸாரை உஷார்படுத்தினர். இதையடுத்து பரமேஸ்வரனைப் பிடிக்க டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏடிஜிபி சேகர், உளவு பிரிவு ஐஜி ஜாபர்சேட் மேற்பார்வையில் கியூ பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது மடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பரமேஸ்வரன் தங்கியிருப்பது தெரிய வந்தது. கடந்த சில நாட்களாக பரமேஸ்வரனின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிகாலையில் அவரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவரது காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அவர் தங்கியிருந்த வீட்டையும் போலீஸார் சோதனையிட்டனர். அங்கு சைக்கிள் பால்ரஸ் (இரும்புக் குண்டுகள்), வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் மாதிரி பொருட்கள் உள்ளிட்டவை சிக்கின. 2 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பரமேஸ்வரனுக்கு பலவகைகளிலும் உதவியாக இருந்த சுதர்சன், கணேஷ் ஆனந்த், அரவிந்தன், அகிலன், ஜோசப் ஆல்டின், கேசவன், பாரீஸ்ராஜ் ஆகிய 7 இலங்கைத் தமிழர்களையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களும் இதே பகுதியில்தான் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 7 பேரும் அகதிகளாக குடும்பத்துடன் வந்தவர்கள்.
பரமேஸ்வரனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது,
நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். எனக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். 1997ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.
ஆரம்பத்திலிருந்ேத நான் உளவுப் பிரிவில்தான் பணியாற்றி வருகிறேன். பொட்டு அம்மன்தான் எனக்கு நேரடித் தலைவராக இருந்தார். உளவுப் பிரிவில் பல்வேறு துணைத் தலைவர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித் தனி பணிகள் ஒதுக்கப்படும்.
தமிழகத்திற்கான துணைத் தலைவராக சிரஞ்சீவி மாஸ்டர் என்பவர் இருந்து வந்தார். அவருடைய கட்டுப்பாட்டில் நான் இருந்தேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் என்னை தமிழகத்திற்கு அகதி போல சென்று தங்குமாறு சிரஞ்சீவி மாஸ்டர் எனக்கு உத்தரவிட்டார்.
தமிழகம் புறப்படுவதற்கு முன்பு எனக்கு சில விசேஷப் பயிற்சிகளைக் கொடுத்தனர். பின்னர் கள்ளப் படகு மூலம் தமிழகத்திற்கு வந்தேன். மடிப்பாக்கம் கோகுல் நகரில் ரூ. 5,00 வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கினேன். 8 மாதங்களாக இங்கு தங்கியுள்ளேன்.
இந்த நிலையில், வெடிகுண்டுத் தயாரிப்புக்குத் தேவையான தளவாடப் பொருட்களை கடத்தி அனுப்புமாறு எனக்கு சிரஞ்சீவி மாஸ்டரிடமிருந்து உத்தரவு வந்தது. இதையடுத்து ஐந்தரை டன் இரும்பு பால்ரஸ் குண்டுகளை வாங்கி கடத்த ஏற்பாடு செய்து வந்தேன்.
எனது செயல்பாடுகள் யாருக்கும் சந்ேதகம் அளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டவேரா காரை வாங்கி அதை வாடகைக்கு விடுவது போல நடித்து வந்தேன்.
எனக்குத் தேவையான பணம் லண்டனில் உள்ள கடாபி என்பவர் மூலம் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
கடந்த மாதம் எனக்கு புதிய தகவல் ஒன்று வந்தது. அதில், நான் உளவுப் பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இலங்கை தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவருடைய உதவியாளர் யோகராஜ், முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாள் ஆகியோரைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரதராஜ பெருமாள் ராஜஸ்தானில் தங்கியுள்ளார். அவரது மகளுக்கு அடுத்த மாதம் டெல்லியில் திருமணம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பெருமாளின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் சென்னையிலிருந்து டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர்.
நானும் அவர்களுடன் நட்பு முறையில் பழகி நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்ேதன். நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் ேசர்ந்தவன் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களோடு சேர்ந்து டெல்லிக்குச் சென்று வரதராஜ பெருமாளை கொல்ல நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் போலீஸில் சிக்கிக் கொண்டேன் என்று கூறியுள்ளார் பரமேஸ்வரன்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் நீதிபதி விடுமுறையில் இருந்ததால், செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆஜர்படுத்தப்பட்டனர். பிறகு இரவிலேயே அவர்கள் புழல் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications