மேலும் 2 விடுதலைப் புலிகளின் ஏஜென்டுகள் கைது
சென்னை: தமிழகத்தில் மேலும் 2 விடுதலைப் புலிகளின் ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தீவிர சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நாதன் என்கிற தம்பிதுரை பரமேஸ்வரன் என்பவர் சிக்கினார். அவருக்கு உதவியாக இருந்த 7 இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.
வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாளைக் கொலை செய்யும் நோக்கத்துடன் இவர்கள் இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் நாதனுக்கு உதவி புரிந்த மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடியைச் சேர்ந்த செல்வராஜ் (62) மற்றும் ரெஜினால்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இருவரும் நாதனுக்கு, வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையான இரும்பு உருளைகள், பிளாஸ்டிக் உருளைகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாதன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த இருவரும் சிக்கினர்.
மும்பையிலிருந்து நேற்று காலை சென்னைக்கு வந்தார் செல்வராஜ். சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்து இறங்கிய அவர் மதுரைக்குப் போவதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்தார். அப்போது போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
விருதுநகரில் வைத்து ரெஜினால்டை போலீஸார் கைது செய்தனர்.
செல்வராஜ் வைத்திருந்த 2 பாக்கெட் சாம்பிள் இரும்பு உருளைகள், ரூ. 7000 பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து விடுதலைப் புலிகளும், அவர்களுக்கு உதவி செய்யும் ஏஜென்டுகளும் பிடிபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர். அனைத்து முகாம்களிலும் தீவிர சோதனை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் கற்பூர சுந்தரபாண்டியனின் நேரடிக் கண்காணிப்பில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications