நகை வாங்க வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி நகை கடை அதிபர் கைது!

Subscribe to Oneindia Tamil


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நகை வாங்க வந்த பெண்ணை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நகைக் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் சேது ரோட்டில் நகை கடை வைத்திருப்வர் கோட்டைசாமி. சில மாதங்களுக்கு முன் இவரது நகை கடைக்கு கோபாலபட்டினத்தை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நகை வாங்க வந்துள்ளார்.

அவரிடம் கோட்டைசாமி விதவிதமான நகைகளை காட்டிபடியே பேசி செல்வி பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டார்.

செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை அடைய திட்டமிட்டார். கூடுதல் டிசைன்கள் காட்டுவதாகக் கூறி அவரை மறுதினம் வரச் சொல்லியிருக்கிறார்.

செல்வி மறுமாள் வந்தபோது அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை தந்துள்ளார். அதைக் குடித்து செல்வி மயங்கியவுடன் கடையின் உள்ள உள்ள தனி அறைக்குள் கொண்டு சென்று செல்வியை நிர்வாணப்படுத்தி அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.

இதை படமும் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்த செல்வி தனக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து கதறி அழுதபடியேர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதை வெளியில் சொன்னால் அவமானம் என்பதால் அமைதியாக இருந்துவிட்டார்.

ஆனால், கோட்டைசாமி தான் எடுத்த படங்களை செல்வியின் செல்போனுக்கு அனுப்பி, மிரட்டி மீண்டும் உடலுறவு வைக்க வற்புறுத்தியுள்ளார். மறுத்தால் இந்தப் படங்களை எல்லோருக்கும் அனுப்புவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் செல்வி பயந்து போய் அவருடன் போனில் பேசவே, ரூ. 5 லட்சம் பணமும், 50 பவுன் நகையும் கேட்டு மிரட்டியுள்ளார் கோட்டைசாமி. செல்வி மறுக்கவே ஆபாச படங்களை மேலும் சிலருக்கு அனுப்ப ஆரம்பித்தார்.

இது குறித்து தெரியவரவே தனது கணவரிடம் நடந்ததை சொன்னார் செல்வி. இதைத் தெடார்ந்து செல்வியின் கணவர் அவரை விட்டுப் பிரிந்துவிட்டதோடு விவகாரத்து செய்வதாகவும் அறிவித்துவிட்டார்.

நகை கடை அதிபரால் கற்பு போனதுடன், தனது வாழ்க்கையும் பறிபோனதையடுத்து மீமிசல் காவல் நிலையத்தில் செல்வி புகார் செய்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோட்டைசாமியை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு எந்த பெண்ணையும் ஏமாற்றி பணம் பறித்தாரா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+