267 சட்டவிரோத இந்தியத் தொழிலாளர்கள் ஷார்ஜாவில் கைது
ஷார்ஜா: ஷார்ஜாவில் முறையான ஆவணங்கள் இன்றி வேலை பார்த்து வந்த 267 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறையான குடியேற்ற மற்றும் ஒர்க் பெர்மிட் இல்லாமல் வேலை பார்த்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஷார்ஜா குடியேற்றத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் இணைந்து மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில், முறையான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றிய 67 இந்தியர்கள் உள்பட 267 பேர் சிக்கினர்.
இவர்கள் அனைவரும் விசிட் விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு தங்குமிட விசா உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அவை காலாவதியாகி விட்டன. அவற்றை அவர்கள் புதுப்பிக்காமல் இருந்துள்ளனர். சிலர் தங்களது ஸ்பான்சர்கள் தவிர மற்றவர்களுக்காகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். அனைவரும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் முடிந்து விட்டதால், கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அவர்களுக்கு பெருமளவில் அபராதம் விதிக்கப்படக் கூடும்.
தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலை கொடுத்தவர்களுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஷார்ஜாவில் உள்ள பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 267 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications