ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக பங்கேற்பு-கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை: தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா நேற்று மாலை தேநீர் விருந்தளித்தார். இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த விருந்தை கூண்டோடு புறக்கணித்து கருணாநிதிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன.
குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர், மாநில முதல்வர், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பர்னாலா தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்தில் முதல்வர் கருணாநிதி, துணைவியார் ராஜாத்தி அம்மாள், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, அவரது மனைவி ஸ்வாதி, டிஜிபி ராஜேந்திரன், உயர் காவல்துறை அதிகாரிகள், பல்வேறு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு:
ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை தேநீர் விருந்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன. அக்கட்சிகளின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
மேலும், அதிமுக, மதிமுக, தேமுதிகவும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
இதன்மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே நிலவும் அதிருப்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நிகழ்ச்சியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு கேடயங்களையும், நினைவுப் பரிசுகளையும் ஆளுநர் வழங்கினார்.
மேலும், தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்?












Click it and Unblock the Notifications