கல்யாணம் முடிந்த 3 மணி நேரத்தில் இறந்த புது மாப்பிள்ளை
சென்னை: திருமணம் முடிந்த மூன்றே மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவர் போர்ட் கார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார்.
இவருக்கும் ரேணுகா (26) என்பவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. அங்குள்ள அகோபில மடத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
காலை 7 மணிக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் மகேஸ்வரும், ரேணுகாவும், தம்பதி சமேதாரக திருப்பதி கோவிலில் சென்று வழிபட்டனர். அதன் பின்னர் இருவரும் உறவினர்களுடன் வெளியே வந்தனர்.
அப்போது வராகசாமி கோவில் அருகே வந்தபோது திடீரென மகேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அனைவரும் பதறிப் போயினர். கல்யாண களைப்பில் அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என நினைத்தனர்.
உடனடியாக கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், மகேஸ்வரனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டதும் ரேணுகா மற்றும் மண வீட்டார் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
மகேஸ்வரின் உடலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ரேணுகா கதறி அழுதார்.
திருமணத்திற்காக வந்த அனைவரும் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்துடன் மகேஸ்வரனின் உடலுடன் சென்னை திரும்பினர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications