எங்களது போனும் ஒட்டுக்கேட்பு: சரத்
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறியுள்ள கட்சித் தலைவர் சரத்குமார், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் சரத்குமார் கூறியுள்ளதாவது,
ஒரு ஆங்கில நாளிதழில் எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நாகராஜன், துணை பொதுச் செயலாளர் ரவீந்திரன் துரைசாமி ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடுவது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். இது கடும் கண்டனத்துக்குரியது.
தீவிரவாதி மற்றும் தேச விரோதிகளைக் கண்காணிப்பதற்காக சந்தேகம் உள்ள நபர்களின் தொலைபேசிகளை போலீசார் பதிவு செய்வதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எங்களது கட்சி நிர்வாகிகளின் தொலைபேசிகளை பதிவு செய்வது, அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் செயலாகும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எந்த சட்டத்தில் இதற்கு இடம் உள்ளது என்று எங்கள் கட்சி கேட்கிறது. இதற்கு 7 நாட்களுக்குள் பதில் தரவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கடிதத்தில் சரத்குமார் கூறியுள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications