எலிவேட்டரில் சிக்கி இறந்த பிரெஞ்சு பெண் குடும்பத்துக்கு ரூ.16.5 லட்சம் நஷ்ட ஈடு
டெல்லி: விமான நிலைய எலிவேட்டரில் சிக்கி இறந்த பிரெஞ்சு பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 16.5 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தேசிய நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்திய விமான நிலைய ஆணையம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோத்ஸனா ஜெதானி என்பவர் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு ஏர்-இந்தியா விமானம் மூலம் வந்தார்.
அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது நகரும் படிக்கட்டுகளில் (எலிவேட்டர்) சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, விமான நிலையத்தின் அலட்சியப் போக்கால்தான் இந்த விபத்து ஏற்பட்டது. எனவே இந்திய விமான நிலைய ஆணையம், ரூ. 1.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெதானியின் குடும்பத்தாருக்கு விமான நிலைய ஆணையம் ரூ.16.5 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விமான நிலைய ஆணையம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.அகர்வால் விமான நிலைய ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டபடி, ஜெதானியின் குடும்பத்தினருக்கு உடனடியாக நஷ்டஈட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications