மதுரை அருகே திமுக பிரமுகர் படுகொலை - போலீஸ் குவிப்பு
மதுரை: மதுரை அருகே திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், கள்ளந்திரியை அடுத்துள்ள பாதமுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் முருகன் (24). இவர் திமுக பிரமுகர்.
இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவு வந்த கும்பல் ஒன்று அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
முருகன் இறந்ததை உறுதி செய்த பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை நள்ளிரவு வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே முருகன் இறந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் முருகன் கொலை செய்யப்பட்டது குறித்து ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், இன்று காலை மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த 3 அரசு நகரப் பேருந்துகளை சிறை பிடித்தனர்.
முருகனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்தால் தான் பேருந்தை விடுவிப்போம் எனக் கூறியதால் பெரும் பதட்டம் நீடித்தது. இதனால் பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர்.
பேருந்து சிறைபிடிக்கப்பட்டது தெரிந்து மாவட்ட புறநகர் எஸ்பி அன்பு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம், கிராம மக்கள் மீனாட்சிபுரம் பஞ்சாயத்துத் தலைவர் கார்மேகம் தூண்டுதலின் பேரில் தான் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட முருகன் ஒரு பிரிவை சேர்ந்ததால், அவருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இருந்த வந்த முன்விரோதத்தால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
முருகனை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மீனாட்சிபுரம் பஞ்சாயத்துத் தலைவர் கார்மேகம் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதால் பேருந்துகள் விடப்படவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications