10ம் வகுப்பு அறிவியல் பாடத் திட்டத்தில் மாற்றம் கோரும் ஆசிரியர்கள்
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் பாடத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பாடத் திட்டம் மற்றும் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வருமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஆசிரியர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
இதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நீண்ட நாளாக ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில், தமிழ் மாநில தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் மோகன்தாஸ் தலைமையில், அறிவியல் ஆசிரியர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்தனர்.
அறிவியல் பாடத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்தும், மிகக் கடினமான பாடப் பகுதிகளை நீக்குவது குறித்து அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், பழைய வினாத்தாள் அமைப்பில் 8 மதிப்பெண்களுக்கு பொருத்துக பகுதி இடம் பெற்றிருந்தது. அந்தப் பகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
இரண்டு மதிப்பெண் வினாவில் வினா எண் 32, 38 ஆகியவற்றுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று விதி உள்ளது. இதில் கட்டாயம் என்று உள்ளதை நீக்க வேண்டும்.
வேறுபாடு தருக, படம் வரைந்து பாகங்களைக் குறி போன்றவற்றை 5 மதிப்பெண் பகுதியில் இரண்டு கேள்விகளாகவும், இரண்டு மதிப்பெண் பகுதியில் இரண்டு கேள்விகளும் என மொத்தம் 14 மதிப்பெண்களுக்கு கேள்விகள் அமைய வேண்டும்.
பழைய வினாத்தாளில் 16 ஐந்து மதிப்பெண் கேள்விகள் கொடுக்கப்பட்டு, அதில் எட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று இருந்தது. இப்போது 12 கொடுக்கப்பட்டு, எட்டு கேள்விகளுக்கு பதில் தர வேண்டும் என்று உள்ளது. இதை மாற்ற வேண்டும். 15 ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்டு, அதில் எட்டு மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும் என்ற நிலை இருந்தால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உள்ளது போல், செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்களும் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ள ஆசிரியர்கள், சில மிகக் கடினமான பாடப் பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி, கெப்ளர் விதிகளில் இருந்து நியூட்டன் ஈர்ப்பு விதியைப் பெறுதல், வெப்ப இணை மாற்று போன்ற பகுதிகளும், கால்வனா மீட்டர், அணு, அணுக்கரு இயற்பியல் பாடத்தில் சில பகுதிகளையும் நீக்க வேண்டும்.
அதே போல சலவை சோடா தயாரித்தல், சல்பியூரிக் அமிலம் தயாரித்தல் உள்ளிட்ட தேவையில்லாத பகுதிகளை நீக்க வேண்டும்.
செல் உயிரியல், இனப்பெருக்க உயிரியல் ஆகிய பாடங்களின் கீழ் வரும் சில கடினமான பகுதிகளையும் நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை கேட்ட தங்கம் தென்னரசு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாராம்.
-
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications