உயர்ந்தது பெட்ரோல்-டீசல் விலை

இன்று மத்திய அமைச்சரவை கூடி இதுதொடர்பான முடிவை எடுத்தது.
அந்தா, இந்தா என்று கடந்த 6 மாதமாக பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு யோசித்து வந்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பாலும் தேர்தல்கள் வந்ததாலும் அதை ஒத்தி வைத்து வந்தது.
விலை உயர்வு குறித்து முடிவெடுக்க அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால் அந்தக் குழுவில் இடம் பெற்ற அமைச்சர்களே விலை உயர்வை ஏற்கவில்லை.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதற்குப் பதிலாக அதன் மீதான அநியாய வரிகளை குறைக்க வேண்டும் என இடதுசாரிகளும் பல கூட்டணிக் கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால், அதை ப.சிதம்பரம் தலைமையிலான நிதியமைச்சகம் ஏற்கவில்லை.
பெட்ரோல், டீசலுக்கு நாம் கொடுக்கும் விலையில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதம் வரியாகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிகளைக் குறைத்தால் விலை உயர்வே அவசியம் இருக்காது.
இந் நிலையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இதைத் தொடர்ந்து அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என இறுதி முடிவெடுக்கப்பட்டது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசலுக்கு 1 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் இல்லை.
மண்ணெணெய் விலை கடந்த 2002ம் ஆண்டிலிருந்து உயர்த்தப்படவில்லை. இப்போதைய பெட்ரோல், டீசல் விலையுயர்வால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மாதம் ரூ. 540 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications