மார்க்சிஸ்ட் மாநாட்டுக்கு தடை கோரும் இந்து மக்கள் கட்சி
சென்னை: கோவையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவையில் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கெடுபிடி வசூல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள், தொழிலதிபர்கள், சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டுக்கு ரூ.30 லட்சம் வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி பற்றி பேசப்போவதாக விளம்பரம் செய்துள்ளனர். ஏற்கனவே கோவை மத சம்பந்தப்பட்ட பதட்டதமான பகுதியாகும். இதில் தேவையில்லாமல் இந்து மதத்தை பற்றி பேசுவார்கள் என அஞ்சுகிறோம். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் மாநாடு 10ம் வகுப்பு தேர்வின் போது நடக்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகீம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications