புலிகள்: அதிமுக நிலையில் மாற்றமில்லை-ஓ.பி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் ஆதரவு அளித்ததற்காக ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று திமுக மேடைப் பேச்சாளர் வெற்றி கொண்டான் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த அதிமுகவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில் வெற்றி கொண்டானின் கோரிக்கை குழந்தைத்தனமாக உள்ளது. ஜெயலலிதா மட்டுமல்லமாமல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகியோரும் விடுதலைப் புலிகளை ஆதரித்துள்ளனர். ஆனால் அனைத்துமே ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்புதான்.
தமிழகத்தில் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்த பின்னர் மொத்த நிலையும் மாறி விட்டது. இந்த தீவிரவாத இயக்கத்தை தமிழகத்தில் வேரோடு ஒழிக்க உறுதி பூண்டார் ஜெயலலிதா. அந்த இயக்கத்தின் மீது தடை உத்தரவையும் பிறப்பித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவும், அதன் தலைவருக்கு எதிராகவும் தீவிர போரைத் தொடங்கியவர் ஜெயலலிதா.
விடுதலைப் புலிகளை எந்த ரூபத்தில் ஆதரித்தாலும் அது குற்றச் செயல்தான் என்ற உறுதியான நிலையில் இருப்பவர் ஜெயலலிதா.
ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை. தொடர்ந்து உறுதியோடு அந்த நிலையில் அவர் இருக்கிறார்.
வெற்றிகொண்டானைப் போலவே அவரது தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், செய்தி ஒலிபரப்பு அமைச்சர் பரிதி இளம்வழுதியும், ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அவர்களை மக்கள் மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications