ரூ. 55 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்!
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர், 1 என்ற எண்ணுடைய வாகன நம்பர் பிளேட்டை ரூ. 55 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். இது ஒரு உலக சாதனையாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் சயீத் அல் கோரி (25). பெரும் பணக்காரரான இவர், எமிரேட்ஸ் பாலஸ் ஹோட்டலில் நடந்த வாகன எண் பிளேட் ஏலத்தில் கலந்து கொண்டார்.
1 என்ற எண் கொண்ட அந்த பிளேட்டை ஏலத்தில் எடுக்க பலரும் அலை மோதினர். ஆனால் சயீத் அல் கோரி, ரூ. 55 கோடிக்கு அந்த பிளேட்டை ஏலத்தில் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன் மூலம் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். அது, 5ம் எண் கொண்ட நம்பர் பிளேட் ஏலமாகும். அந்த நம்பர் பிளேட்டை சுமார் ரூ. 26 கோடிக்கு கோரியின் சகோதரரான தலால் அலி முகம்மது கோரி ஏலத்தில் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு எண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகளை ஏலம் விட்டு அதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இந்த எண்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதால் அதை வைத்து ஏன் பணம் சம்பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தால் விளைந்ததுதான் இந்த ஏலமாகும்.
பேசாமல், நம்ம ஊரிலும் கூட பேன்சி எண் நம்பர் பிளேட்டுகளை இப்படி ஏலம் விட்டால் அரசுக்கு அமோக வருவாய் கிடைக்கும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications