திருவள்ளுவர் பல்கலையை துவக்கியது நான்-ஜெயலலிதா
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியிலேயே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏதோ தற்போது தான் திருவள்ளுவர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கி இருப்பது போல் விழா நடத்தியுள்ளார் கருணாநிதி என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2002ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் ஆளுநர் உரையில், சமூக மாற்றத்திற்கு ஒரு தன்னிகரற்ற முன்னோடி முயற்சியாக, ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் உள்ளிட்டவர்களின் பொருளாதார, சமூக மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கொண்ட புதிய பல்கலைக்கழகம் ஒன்று வேலூரில் ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002ம் ஆண்டே துவங்கப்பட்டு, வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறைக்கு சொந்தமான கட்டடங்களில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர் ஆகியோரும் உடனடியாக நியமிக்கப்பட்டு விட்டனர். இப்பல்கலைக் கழகத்தின் கீழ் 57 கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் மற்றும் 10 கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
எனது ஆட்சிக்காலத்திலேயே இந்தப்பல்கலைக் கழகத்திற்கென சொந்த நிலம் வாங்குவதற்காக, வேலூர் வட்டத்தில் உள்ள இறையான்காடு கிராமத்தில் சுமார் 135.06 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்க ஏதுவாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கி அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.
அந்த நிலம் படிப்படியாக வாங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆனால், நான் தொடங்கிய பணியைத் தொடராமல், அதை அப்படியே விட்டுவிட்டு வேறு புதிய இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஆடம்பர விழா நடத்தி, புதிய அடிக்கல்லை நாட்டி, கருணாநிதி ஏதோ புதிதாக தற்போது தான் திருவள்ளுவர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கி இருப்பது போல் விழா நடத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications