For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை

By Staff
Google Oneindia Tamil News

Pervez Musharraf
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு சமமாக நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்றுள்ளது. முஷாரப் ஆதரவு பெற்ற முஸ்லீம் லீக் கட்சிக்கு படு தோல்வி கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நேற்று நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. சர்வதேச தேர்தல் பார்வையாளர்களின் கண்காணிப்பில் கீழ் நடந்த இந்தத் தேர்தலில் முக்கால்வாசி வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. 35 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே பெனாசிர் கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் மாறி மாறி வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தன.

அதிபர் முஷாரப்பின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) கட்சிக்கு பெருத்த அடி விழுந்தது.

இந்த தேர்தலில் பெனாசிர் படுகொலை காரணமாக நிலவும் அனுதாப அலையால் அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் ஆரம்பத்தில் நவாஸ் கட்சியை விட பின்தங்கியே இருந்தது பாகிஸ்தான் மக்கள் கட்சி.

பிற்பகலுக்கு மேல்தான் அக்கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க ஆரம்பித்தன. தற்போது அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான் மக்கள் கட்சி. இருப்பினும் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

அதேபோல நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி (என்) கட்சியும் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது.

3வது இடத்திற்கு ஆளுங்கட்சி தள்ளப்பட்டு விட்டது. மற்ற இஸ்லாமிய மதவாதக் கட்சிகளுக்கு இத்தேர்தலில் பெருத்த அடி விழுந்துள்ளது.

மாகாணங்களிலும் மகா அடி

மாகாண சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு மகா அடி கிடைத்துள்ளது. மேலும் மதவாத கட்சிகளுக்கும் இங்கு மரண அடி கிடைத்துள்ளது. தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் மதவாதக் கட்சிகளுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரீப் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி முன்னணியில் உள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் மட்டுமே ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - க்யூவுக்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்துள்ள இடங்கள் விவரம்.

நாடாளுமன்றம்:

மொத்த இடங்கள் - 272
தேர்தல் நடந்தது - 269
முடிவு தெரிந்தவை - 255

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பெனாசிர்) - 87
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ஷெரீப் - 66
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (முஷாரப்) - 38
எம்.க்யூ.எம் - 19
ஏ.என்.பி - 10
பி.என்.பி (ஏ) - 1
எம்எம்ஏ - 2
மற்றவர்கள் - 32

மாகாண சட்டசபை:

பஞ்சாப்:

பாகிஸ்தான் மக்கள் கட்சி - 76
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) - 102
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) - 61
எம்.க்யூ.எம் - 0

சிந்து:

பாகிஸ்தான் மக்கள் கட்சி - 64
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) - 4
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) - 9
எம்.க்யூ.எம் - 38

வடமேற்கு எல்லைப் புற மாகாணம்:

பாகிஸ்தான் மக்கள் கட்சி - 15
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) - 5
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) - 6
எம்.க்யூ.எம் - 0
ஏஎன்பி - 29

பலுசிஸ்தான்:

பாகிஸ்தான் மக்கள் கட்சி - 7
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) - 0
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) - 17
எம்.க்யூ.எம் - 0

தற்போதைய நிலவரப்படி யாருக்கும் மெஜாரிட்டி இல்லை. இருப்பினும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி பெனாசிர் கட்சியும், ஷெரீப் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளன. அந்தக் கூட்டணி ஆட்சியில் மேலும் சில கட்சிகளும் இணையும் எனத் தெரிகிறது.

உருண்ட தலைகள்:

இந்தத் தேர்தலில் பல முக்கிய தலைகள் உருண்டுள்ளன. ஆளுங்கட்சியில் இருந்த பல அமைச்சர்கள் படு தோல்வியை சந்தித்துள்ளனர்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் க்யூ கட்சியின் தலைவரான சுஜாத் உசேன் தோல்வி அடைந்தார். முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி தோல்வி அடைந்தார். முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் தோல்வியைத் தழுவினார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -க்யூ கட்சியின் முக்கியத் தலைவரும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவருமான பர்வேஸ் இலாஹியும் படு தோல்வியை சந்தித்துள்ளார்.

முஷாரப் என்னாவார்?:

பெனாசிர் - ஷெரீப் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் முதலில் முஷாரப்புக்கு குறி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவியிலிருந்து அகற்றப்படக் கூடும். இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பாகிஸ்தான் மீடியாக்கள் கூறுகின்றன.

அப்படி ஒரு நிலை வந்தால் மீண்டும் நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டு, எமர்ஜென்சியை கையில் எடுப்பார் முஷாரப்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X