சென்னையில் விஜய்க்கு 17 கிமீ தனிரூட்.. நீலாங்கரை டூ தலைமை செயலகம் வரை.. டிராபிக் தொல்லை இனி இல்லை
சென்னை: முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்துக்கு தினமும் 17 கிலோமீட்டர் தூரம் காரில் பயணித்து வருகிறார். இவரது பயணத்தின்போது சாலைகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டன. இதுபற்றி புகார் எழுந்த நிலையில் முதல்வர் விஜய், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க இன்று முதல் 17 கிமீ தனிரூட்டில் பயணம் செய்ய தொடங்கி உள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். தினமும் அங்கிருந்து தான் காரில் புறப்பட்டு தலைமை செயலகம் வந்து செல்கிறார். விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கும், தலைமை செயலகத்துக்கும் இடையே 17 கிலோமீட்டர் தொலைவு உள்ளது.

இதனால் விஜய் வீட்டில் இருந்து தலைமை செயலகமும், தலைமை செயலகத்தில் இருந்து வீட்டிற்கும் செல்லும்போது பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதோடு, பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதன்படி முதல்வர் விஜய்யின் பயணத்துக்காக சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. மாறாக சாலையின் ஒரு பகுதியில் முதல்வர் விஜய் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு தனது பயணத்தால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்வது பற்றி விஜய்யும் அறிந்து கொண்டார். இதையடுத்து பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் விஜய் உறுதியான முடிவு எடுத்தார். இதையடுத்து அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி அவரது வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்கென இப்போது தனியாகப் பிரத்யேக பாதை (CM Route) அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாலையின் ஒரு பகுதியில் முதல்வர் விஜய் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் செல்கின்றனர். மீதமுள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படாமல் வழக்கம்போல் பிற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் சாலையில் விஜய்யின் கான்வாய் வாகனங்கள் சென்ற பிறகு மீண்டும் அந்த பாதை அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் பொது போக்குவரத்துக்கு வந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் விரைவாக பயணித்து வருகின்றனர். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது இனி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். விஜய்யின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில் -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications