விரைவில் நாங்குநேரி 'டெக் பார்க்'-ஸ்டாலின்
நெல்லை: நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதால் விரைவில் பணிகள் துவங்கும் என்று நெல்லையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நெல்லையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 96ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது புதிய கலெக்டர் அலுவலகம் அமைக்கும் திட்டத்தை துவக்கினார்.
அதன் அடிப்படையில் நெல்லையில் 6 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுலகம் கட்டப்பட்டுள்ளது. இதுபோல் போக்குவரத்து வசதிக்காக 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் வண்ணார்பேட்டையில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் பெயரில் மேம்பாலம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுபோல் 33 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 6 கோடியே 68 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 27 ஆயிரத்து 348 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டம் சென்னை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்:
இதற்கிடையே, நெல்லை மாவட்டம் ஆய்க்குடி, அச்சன்புதூர், பண்பொழி, வடகரை, கீழ்பிடகை பேரூராட்சிகள் மற்றும் 151 சிற்றூர்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட துவக்க விழா இன்று ஆய்க்குடியில் நடக்கிறது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் கடையநல்லூர், செங்கோட்டை, தென்காசி நகராட்சி பகுதிகள், மேலகரம், இலஞ்சி, குற்றாலம், புதூர், உள்பட பல்வேறு பகுதிகளில் தமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த முறை திமுக ஆட்சி பதவியேற்றவுடன் கடந்த ஆண்டு ராயகிரி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் மற்றும் 71 வழியோர கிராமங்கள் பயன்பெறும் வகையில் 43 கோடி செலவில் திட்டம் துவங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இத்திட்டத்தை மக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு ஆய்க்குடியில் நடக்கிறது. உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
திமுகவில் இணைந்த தேமுதிகவினர்:
முன்னதாக நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி தேமுதிக கவுன்சிலர் தலைமையில் ஏராளமான தேமுதிகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ஏர்வாடியில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார்.
அப்போது அவரது முன்னிலையில் ஏர்வாடி தேமுதிக பேரூராட்சி கவுன்சிலர் பொன்னரசி மற்றும் 12-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் தஸ்லீமா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
மேலும் தேமுதிகவைச் சேர்ந்த பெருவாரியானவர்களும் திமுகவில் இணைந்தனர்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications