இலங்கை அகதிகள் வங்கிக் கணக்கு தொடங்கலாம்!
சென்னை: தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், பேங்க் ஆப் சிலோன் வங்கியில், வருகிற 25ம் தேதி முதல் கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்கலாம் என இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள பேங்க் ஆப் சிலோனில் வருகிற 25ம் தேதி முதல் இலங்கை தமிழ் அகதிகள் கணக்கு தொடங்கி பணத்தைப் போட்டு வரலாம். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை துணைத் தூதரகமும், ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகமும் இணைந்து செய்துள்ளன.
ஏற்கனவே இலங்கையில் நடத்தப்படும் பத்தாவது வகுப்புத் தேர்வு, இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக கடல் கடந்து சென்னையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இங்குள்ள தமிழ் அகதி மாணவ, மாணவியரின் நலனுக்காக தேர்வு இங்கேயே நடத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் வங்கிக் கணக்கு தொடங்கவும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிலோன் வங்கியில் கணக்கு தொடங்குவதன் மூலம், இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது தங்களது சேமிப்பையும் எளிதாக இலங்கை வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள இதன் மூலம் வழி ஏற்படுவதாக இலங்கைத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications