அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் திடீர் முடிவு!!!

பாகிஸ்தான் தேர்தலில் முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) பெரும் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.
நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளது. இருப்பினும் பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்த நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே பதவி விலக மாட்டேன் என கூறி வந்தார் முஷாரப். இந்த நிலையில், தற்போது பதவி விலக அவர் தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு, பெனாசிர் கட்சியும், ஷெரீப் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் முதல் வேலையாக தன்னை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்று எண்ணுவதே முக்கிய காரணம்.
அப்படிப் போவதை விட தானாக பதவி விலகி விட முஷாரப் முடிவு செய்துள்ளார். இதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்று பாகிஸ்தான் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது ராஜினாமா குறித்து தீவிரமாக அவர் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிடக் கூடும் என்றும் தெரிகிறது.
நல்ல மரியாதையோடு பதவியிலிருந்து விலக முஷாரப் தீர்மானித்துள்ளார் என அந்த செய்திகள் கூறுகின்றன.
அடுத்த பிரதமர் அமீன் பகீம்:
இதற்கிடையே பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக பெனாசிரின் பாகி்ஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த அமீன் பகீம் பதவியேற்பார் என்று தெரிகிறது.
இவரை பிரதமராக ஏற்க ஆட்சிக்கு ஆதரவு தரவுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன் வந்துவிட்டார்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பகீம்,
புதிய அரசு பதவியேற்றவுடன் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக நம்பிக்கை இல்லா கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றாது என்று கூறியுள்ளார். இப்போது தான் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதற்குள் அதை சீர்குலைக்கும் எந்த வேலையையும் செய்ய மாட்டோம் என்றார்.
ஆனால், அரசு பதவியேற்றவுடன் முதல் வேலையாக முஷாரப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நவாஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனையால் தான் கூட்டணி ஆட்சி அமைவதி்ல் இழுபறி நீடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications