தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்: மூன்று ரயில்கள் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

Lalu Prasad Yadav
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் 53 புதிய ரயில்கள் அறிவி்க்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1. சென்னை-சேலம் இடையே விருத்தாசலம் வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்.

2. சென்னை-திருச்செந்தூர் இடையே வாரந்திர ரயில்.

3. ராமேஸ்வரம்-வாரணாசி இடையே வாரந்திர ரயில்

4. சென்னை-கயா இடையே வாராந்திர ரயில்

5. சென்னை-ராமேசுவரம் இடையே மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக தினசரி ரயில்

6. சென்னை-திருச்சி இடையே மயிலாடுதுறை வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்.

7. மதுரை-தென்காசி இடையே தினசரி ரயில்

8. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே தினசரி ரயில்

9. நெல்லை-திருச்செந்தூர் இடையே தினசரி பாசஞ்சர் ரயில்

இதில் சில ரயில் பாதைகளில் அகலப் பாதை பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் அந்த ரயில்கள் இயக்கப்படும்.

கேரளா நெருக்கடி-தமிழக ரயில் எர்ணாகுளத்துக்கு:

பெங்களூர்-கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் கேரள லாபியின் பயங்கர நெருக்கடி காரணமாக எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலையும் அமைக்கப்படவுள்ளது.

பெங்களூர் பாபா ஆசிரமம் வரை சென்னை ரயில்:

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் சாய் பாபாவின் பிரசாந்த்தி நிலையம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கோவை-கும்பகோணம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை வரை நீடிக்கப்படுகிறது

தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் திருச்செந்தூர் வரை நீடிக்கப்படும்.

மேலும் எண்ணூர் துறைமுகத்திலிருந்து புத்தூர் வரை தனி சரக்கு ரயில் பாதை அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

பெங்களூர்-புதுச்சேரி ஏழைகள் ரதம்:

நாடு முழுவதும் 10 புதிய ஏழைகள் ரதம் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் ஒரு ரயில் புதுச்சேரி-பெங்களூர் இடையே வாரம் 3 தடவை இயக்கப்படவுள்ளது.

2010ம் ஆண்டுக்குப் பின் முழுக்க முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில் பெட்டிகள் தான் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு புனே-டெல்லி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மும்பை புறநகர் ரயில் போக்குவரத்தில் 300 கூடுதல் சேவைகள் சேர்க்கப்படவுள்ளன.

இவ்வாறு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+