ஆஸ்திரேலியாவுக்கு பயம் வந்து விட்டது: ஹர்பஜன்
சிட்னி: இனிமேலும் நாம் அசைக்க முடியாத சாம்பியன் இல்லை என்ற பயம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து விட்டது. அந்த விரக்தியில்தான் இந்திய வீரர்களை அவர்கள் திட்ட ஆரம்பித்துள்ளனர் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
மாத்யூ ஹெய்டன் தன்னை விஷ களை என்று கூறியிருப்பது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவிக்கையில், இனிமேலும் கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணி, சாம்பியனாக ஆஸ்திரேலியாவால் இருக்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. அதன் விளைவாகத்தான், அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த பேச்சுக்கள், ஏச்சுக்கள் எல்லாம்.
தங்களுக்கு ஒரே போட்டி இந்தியாதான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்தியா மட்டுமே நமக்கு பெரும் நெருக்கடி கொடுக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். எனவேதான் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
தலையில் உள்ள கிரீடம் நழுவ ஆரம்பித்திருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இல்லாவிட்டால் 19 வயது இளம் வீரரைப் (இஷாந்த் சர்மா) பார்த்து, மிகப் பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் (மாத்யூ ஹெய்டன்) பாக்ஸிங் பண்ணலாம் வர்றியா என்று கேட்பாரா?
ஹெய்டன் பேச்சுக்குப் பதில் பேச்சு பேச நான் தயாராக இல்லை. அந்த சண்டையில் சேர நான் விரும்பவில்லை. இந்த ஆட்டத்துக்கு நான் தயாராக இல்லை.
இவர்கள் (ஆஸ்திரேலியர்கள்) என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களும், அணிகளும் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் சிங்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications