சேது: மத்திய அரசு தயங்கினால் தமிழகமே நிறைவேற்ற வேண்டும்- பழ.நெடுமாறன்
திருச்சி: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற தயங்கினால் மாநில அரசே அதை நிறைவேற்ற வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.60,000 கோடி ரூபாய் வரை கடனை ரத்து செய்தது பாராட்டத்தக்கது.
அகிம்சைவாதியான மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் ராணுவ செலவுக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்குவதை அதிகரித்து கொண்டே போவது தவறான முன் உதாரணம். இந்தப் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்புவதற்காக சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் பாதி பொருட்கள் வீணாகிவிட்டன. இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்.
தமிழகத்தில் 250 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் திட்டம் சேது சமுத்திர திட்டம். மதரீதியான காரணங்களை சொல்லி அதை தடுக்க முனைவது சரியல்ல. ஏற்கனவே 60 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அந்த திட்டத்தை தாமதப்படுத்துவது திட்டத்திற்காக இதுவரை செலவழித்த பணத்தை வீணடிப்பதற்கு சமம்.
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற தயங்கினால் மாநில அரசே அதை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்றார் நெடுமாறன்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications