பங்காரு அடிகளார் பிறந்தநாள்-தங்க ரதத்தில் ஊர்வலம்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மீக குருவான பங்காரு அடிகளாரின் 68வது பிறந்த நாள் விழாவையொட்டி அவர் தங்க ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பங்காரு அடிகளாரின் 68வது பிறந்தநாள் விழா கடந்த 3 நாட்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் வெளிநாட்டு பக்தர்கள் உட்பட 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. விழா மலரை விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட முன்னாள் நீதிபதி தணிகாசலம் பெற்றுக் கொண்டார்.
68வது பிறந்த நாளை கொண்டாடும் பங்காரு அடிகளாரை ஆதிபராசக்தி வேள்விக் குழுவினரும், ஆதிபராசக்தி பாதுகாப்புக் குழுவினரும் அவரது இல்லத்தில் சந்தித்து மரியாதைகள் செய்து அவருக்கு பாத பூஜைகளை செய்தனர்.
நேற்று காலை 8.30 மணியளவில் கடலூர், விழுப்புரம் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் தங்க ரதத்தில் ஏற்றி சித்தர் பீடத்துக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து ஆன்மீக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி இயக்கத்தின் ஆன்மீக பணிகளில் சிறப்புடன் பணியாற்றிய தொண்டர்களுக்கு சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.
நேற்று மாலை 4 மணியளவில் கருவறை முன்பாக நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.
இன்று காலை 9 மணிக்கு தனது தாய், தந்தையர் உருவப் படங்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கிய பங்காரு அடிகளார் பின்னர் பிறந்த நாள் கேக்கை வெட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு வழங்கினார். ஆதிபராசக்தி பக்தர்கள் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் வரிசையாக நின்று பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications