குடும்ப விருந்துகளுக்கு உலை வைக்கும் செல்போன்கள்!

கடைசியாக நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு எத்தனை நாட்களாகியிருக்கும்? இதையே ஒரு ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டு லண்டனைச் சேர்ந்த ஹெய்ன்ஸ் என்ற நிறுவனம் ஆய்வுக் களத்தில் இறங்கியது.
இதில் பங்கேற்ற பெரும்பாலானோர், 'பிசியாக இருப்பதால் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட முடிவதில்லை. அப்படி கிடைக்கும் வாய்ப்புகளையும் செல்போன் அழைப்புகள், கம்ப்யூட்டர்கள், கேம்கள் பறித்து விடுகின்றன' என்று தெரிவிக்கின்றனர்.
குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது இன்று அரிதான விஷயமாகி விட்டது. ஐந்தில் ஒரு குடும்பம்தான் இப்படி கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தொடர்கிறார்கள். அதுவும் கூட வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோதான் என்கிறது இந்த ஆய்வு.
1,000 குடும்பங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட முடியாதது ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் கூறுகையில், மிகவும் பிசியாக இருப்பதால், சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட நேரம் கிடைக்கவில்ைல என்று அவர்களில் முக்கால்வாசிப் பேர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து மன நல ஆலோசகரான பாட் ஸ்பன்ஜின் கூறுகையில், குடும்பத்தோடு குறைந்தது 20 நிமிடங்களையாவது செலவிட வேண்டும். ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் அப்போது இடம் பெற வேண்டும்.
சேர்ந்து சாப்பிடுவது என்பதில் 3 கட்டங்கள் உள்ளன. குடும்ப உறவுகளுக்கு இந்த மூன்றுமே முக்கியமானவை. முதலில், அருமையான சமையல். இரண்டாவது, சமையல் முடிந்ததும் அனைவரும் வந்து சாப்பாட்டு மேசை முன்பு அமருவது. 3வது இனிமையான பேச்சு.
இந்த 3வது கட்டம்தான் குடும்ப உறவுகளுக்கு மிக முக்கியமானது. அப்போதுதான் மனம் விட்டுப் பேச முடியும். அன்றைய நிகழ்வுகள், அனுபவங்கள், கவலைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது தொலைந்து போய் விட்டது. டிவி மட்டும் இதற்குக் காரணம் அல்ல. கூடவே செல்போன்கள், கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள், கம்ப்யூட்டர்களும் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
இன்றைய குடும்பங்களில் சாதாரண முறையில் கூட பேசிக் கொள்வது குறைந்து விட்டது.
குடும்ப வாழ்க்கைக்கு மிக முக்கியமானது மனம் விட்டுப் பேசுவது. எனவே குறைந்தபட்சம் டைனிங் டேபிள் முன்பாவது சேர்ந்து உட்கார்ந்து பேச முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வேகமாகப் போகும் உலகில் குடும்ப உறவுகள் விலகிப் போகாமல் தடுக்க முடியும் என்கிறார் ஸ்பன்ஜின்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications