தண்ணீர் பாய்ச்சும் தகராறு-தம்பியை கொன்ற அண்ணன்
நெல்லை: நெல்லை மாவட்டம் சிவகிரி குமராபுரம் பாலசுப்பிரமணியபுரம் சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பெரிய சன்னாசி. இவரது பக்கத்து வீட்டில் தம்பி சின்ன சன்னாசி வசித்து வந்தார்.
அண்ணன் தம்பி இருவருக்கும் சண்முகநேரி கண்வாய் அருகே தனிதனியாக வயல்கள் உள்ளன.
இங்குள்ள பொதுக் கிணற்றில் இருவரும் முறை வைத்து தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இதில் அவர்களிடேயே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
நேற்று மாலை சின்ன சன்னாசி தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெரிய சன்னாசிக்கும், அவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பெரிய சன்னாசி அரிவாளால் சின்ன சன்னாசியை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது வலது மணிக்கட்டு துண்டாகி விழுந்தது.
தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுபட்ட சின்னசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் சிவகிரி இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய பெரிய சன்னாசியை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications