பின்னால் போன பில்கேட்ஸ்: பஃபெட் நம்பர் ஒன்!

2வது இடத்திற்கு மெக்சிகோ டெலிகாம் நிறுவன அதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 60 பில்லியன் டாலராகும்.
இந்தியாவின் லட்சுமி மிட்டல் 4வது இடத்தையும், முகேஷ் அம்பானி 5வது இடத்தையும், அனில் அம்பானி 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிசினஸ் இதழான போர்ப்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்திற்கு வாரன் பப்பட் முன்னேறியுள்ளார். இதுவரை அந்த இடத்தில் இருந்து வந்த பில் கேட்ஸ் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் அதிபரான வாரன் பப்பட் 62 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திற்கு உயர்ந்திருக்கிறார். இதுவரை 2வது இடத்தில் அவர் இருந்து வந்தார்.
கடந்த 13 வருடங்களாக முதலிடத்தில் இருந்து வந்தவர் கேட்ஸ். 13 ராசியில்லாத எண் என்ற கருத்து உலகம் முழுவதும் உள்ளது. அதை மெய்ப்பிப்பது போல 13 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்ஸ் இடம் மாறியுள்ளார். கேட்ஸின் சொத்து மதிப்பு 58 பில்லியன் டாலராகும்.
4வது இடத்தில் இந்தியரான லட்சுமி மிட்டல் இருக்கிறார். முகேஷ் அம்பானிக்கு 5வது இடமும், அவரது தம்பி அனில் அம்பானிக்கு 6வது இடமும் கிடைத்துள்ளன.
டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் கே.பி.சிங் 8வது இடத்தில் இருக்கிறார்.
லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 45 பில்லியன் டாலராகும். முகேஷ் அம்பானிக்கு 43 பில்லியன் டாலரும், அனில் அம்பானிக்கு 42 பில்லியன் டாலர் சொத்தும் உள்ளன.
கே.பி.சிங்கின் சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலராகும்.
இந்தப் பட்டியலில் மேலும் சில இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். ரவி ரூயா மற்றும் சசி ரூயா, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் முறையே மற்றும் 30வது இடத்தில் உள்ளனர்.
சேனாபதி கோபாலகிருஷ்ணன், ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ராகுல் பஜாஜ் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் மொத்தம் 1125 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் முதல் பத்து பேரில் 4 பேர் இந்தியர்கள் என்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
புதிதாக சேர்ந்துள்ள 226 பெரும் பணக்காரர்களில் 19 பேர் இந்தியர்கள். இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.
அமெரிக்காவிலிருந்து 77 புதுப் பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். 3 பேர் ரஷ்யர்கள், 28 பேர் சீனர்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications