மார்கரெட் தாட்சருக்கு சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி
லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
82 வயதாகும் மார்கரெட் தாட்சருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய லண்டன் நகரில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட தாட்சருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அவரது உடல் நலம் நிலையாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் தாட்சர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002ம் ஆண்டு முதல் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. உடல் நலனைக் கருத்தில் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்கும் டாக்டர்கள் தடை விதித்திருந்தனர்.
அதன் பின்னர் அவருக்கு அடிக்கடி வாதம் வந்து அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவருக்கு நினைவாற்றலும் கூட பாதிக்கப்பட்டது.
இன்னும் 2 நாட்களுக்கு தாட்சர் மருத்துவமனையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications