7 வயது சிறுமி பலாத்காரம்
நாகை: நாகப்பட்டினம் அருகே ஏழு வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் தேடி வருகின்றனர்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த செல்வம்-ஆனந்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதியின் மகள் ரம்யா (வயது 7- பெயர் மாற்றப்பட்டுள்ளது).
செல்வம் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். ஆனந்தி தனது மகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டின் வெளியே ரம்யா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் வீராசாமி என்பவரின் மகன் சித்திரை வேலு, சிறுமியை தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் மயங்கி விழுந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டான்.
சிறுமியைக் காணாமல் தேடிய உறவினர்கள், தோப்பில் மயங்கி கிடந்தது கண்டு அதிர்ந்தனர். தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தான் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து ஆனந்தியின் அண்ணன் கொடுத்த புகாரின்பேரில் தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சித்திரைவேலுவை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications