சர்தாரி பிரதமராக பெனாசிர் கட்சித் தலைவர்கள் ஆதரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக மறைந்த பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிந்து 20 நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு அரசு அமைக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும் இதுதொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றன.
யார் பிரதமர் என்பதில்தான் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான மக்தூம் ஹமீத் பாஹிமே பிரதமராக பொறுப்பேற்கக் கூடும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதுதொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் தாமதித்து வந்ததால் பாஹிம் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று நிலைமை தலைகீழாக மாறியது. பாஹிமுக்குப் பதில் சர்தாரியே பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் குரல் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கட்சி பிளவுபடாமல் தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்தாரி பிரதமராகப் பதவியேற்றால், பாஹிமுக்கு நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியையும், அவரது மகனுக்கு பிரதமரின் ஆலோசகர் பதவியையும் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்தாரி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது சர்தாரி எம்.பியாக இல்லை. எம்.பியாக இருந்தால் மட்டுமே பிரதமர் பதவியை வகிக்க முடியும். எனவே அவர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகும் வரை, தனது உறவினர் ஒருவரை இடைக்காலப் பிரதமராக நியமித்து, தேர்தலில் போட்டியிட்டு பின்னர் பிரதமர் பதவிக்கு அவர் வருவார் எனக் கூறப்படுகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications