அத்வானியைக் கொல்ல லஷ்கர் இ தொய்பா சதி
டெல்லி: பாஜக மூத்த தலைவரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானியைக் கொல்ல லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் அத்வானியைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டது.
உ.பி மாநிலம் ராம்பூருக்கு அத்வானி செல்லும்போது, அவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அத்வானியை நேரில் சந்தித்துத் தெரிவித்தார்.
இதையடுத்து தனது ராம்பூர் பயணத்தை அத்வானி ரத்து செய்தார். இந்த நிலையில் அத்வானிக்கு கொலை மிரட்டல் இருப்பதாக மீண்டும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அத்வானியின் சுற்றுப்பயணத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தி, அவரைக் கொலை செய்ய லஷ்கர் அமைப்பு திட்டமிட்டுள்ளது. மனு கொடுப்பவர்கள் போல, பத்திரிக்கையாளர்கள் போல, கட்சியினர் போல நடித்து இந்தக் கொலை திட்டத்தை செயல்படுத்த லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பாஜகவை மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த சதியைத் தொடர்ந்து அத்வானியின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications