For Daily Alerts
Just In
பட்டுக்கோட்டையில் ரயில் பெட்டி எரிந்து சாம்பல்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் பெட்டி ஒன்று தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பத்து பெட்டிகளுடன் பழைய ரயில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயிலின் ஏசி பெட்டியில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் சேர்ந்து மற்ற 9 பெட்டிகளையும் கைகளாலேயே தள்ளி அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் அந்தப் பெட்டிகளுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அந்தப் பெட்டி முழுமையாக எரிந்து சாம்பலானது.