ரயிலில் பெண்ணிடம் 50 பவுன் நகைகள் கொள்ளை
பாலக்காடு: ரயிலில் வந்த பெண்ணிடம் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஸ்ரீகுமார் (32). இவரது மனைவி ஸ்ரீஜா (30). சொந்த ஊரான கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் ஒரு திருமணத்துக்காக சென்றார் ஸ்ரீஜா.
திருமணம் முடிந்து பெற்றோருடன் நேற்று முன் தினம் இரவு திருவனந்தபுரம்-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை கிளம்பினார்.
இவர்களிடமிருந்த 3 சூட்கேஸ்களில் ஒரு சூட்கேசில் 50 பவுன் தங்க நகைகள் இருந்தன. சூட்கேஸ்களை இருக்கைக்கு அடியில் வைத்துக் கொண்டு பயணித்தனர்.
ரயில் திருச்சூரை தாண்டி பாலக்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது நகைகள் வைத்திருந்த சூட்கேஸ் மட்டும் காணமல் போனது. நகைகள் அடங்கிய சூட்கேசுடன் இவர்க் வந்ததை நோட்டமிட்டு ரயிலில் ஏறிய மர்ம கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து பாலக்காடு ரயில் நிலையத்தில் ஸ்ரீஜா புகார் செய்தார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.