For Daily Alerts
Just In
இன்ஸ்பெக்டர் மகள் கடத்தல்-காதலனுக்கு வலை
கரூர்: கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் கடத்தப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. கரூர் பாலவிடுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்.
இவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் தீபபிரியா (17).
தீபப்ரியா அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு வடித்து வருகிறார். இவரும் வெங்கடேசன் என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் பிரியா காணாமல்போனார். விசாரணையில் வெங்கடேசனும் காணமல் போனது தெரிய வந்தது.
இதையடுத்து வெங்கடேசனும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து மகளை கடத்திச் சென்றுவிட்டதாக அவரது தாயார் ராஜேஸ்வரி சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.