ஜெயலட்சுமி வழக்கில் சிக்கிய டிஎஸ்பிக்கு மீண்டும் வேலை
ஏட்டு முதல் எஸ்பிவரை பல்வேறு போலீஸ் அதிகாரிகளை தனது வலையில் விழ்த்தி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. இவரது வலையில் விழுந்தவர்களில் பாளையங்கோட்டை ஆயுதப்படை பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றிய ராஜசேகரும் ஒருவர்.
கேடிசி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிவகாசி ஜெயலெட்சுமியுடன் குடும்பம் நடத்தினார். இது குறித்து அவரது மனைவி தாட்சாயினிக்கு தெரிய வரவே அவர் ஐஜியிடம் புகார் செய்தார். அதையடுத்து ராஜசேகர் திண்டுகல்லுக்கு மாற்றப்பட்டார். பின்னர் திருச்சி ஆயுதப்படை எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார்.
அதன்பிறகு அவர் ஜெயலெட்சுமியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தினார். இதனால் தட்சாயினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ராஜசேகர், ஜெயலெட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் சப்-கோர்ட்டில் நடந்தது. இதில் இருவருக்கும் 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜசேகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கீழ்கோர்ட் தீர்ப்பை ரத்து செய்தது.
இதையடுத்து ராஜசேகர் தன் மீது எந்த குற்றவழக்குகளும் நிலுவையில் இல்லை. எனவே மீண்டும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மனு கொடுத்தார். ஆனால் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாவிட்டால் அவருக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டுமேன விதிமுறை உள்ளது. எனவே ராஜசேகருக்கு மூன்று மாதத்தில் தமிழக அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?













Click it and Unblock the Notifications