தேசிய நுண்ணுயிரியல் கழக தலைவராக மதுரை பேராசிரியர் நியமனம்
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பி.குணசேகரன், இந்திய நுண்ணுயிரியல் கழகத்தின் (ஏ.எம்.ஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒரு ஆண்டுக்கு இப்பதவியை அவர் வகிப்பார். நுண்ணுயிரியல் துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைப்பு ஏ.எம்.ஐ.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் ஏ.எம்.ஐ அமைப்பின் 50வது வருடாந்திர மாநாட்டுக்கு பேராசிரியர் குணசேகரன் தலைமை தாங்குவார்.
பேராசிரியர் குணசேகரன் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், ஜீனோமிக் அறிவியல் மைய ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், எம்.எஸ்சி (ஜீனோமிக்ஸ்) வகுப்புக்கான ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
ராஜேந்திரனுக்கு இளம் விஞ்ஞானி விருது:
இதற்கிடையே, ஏ.எம்.ஐ வழங்கும் இளம் விஞ்ஞானி விருது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவியாளர் ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது.
ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் இந்த விருதினை ஏஎம்ஐ வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதினை ஜீனோமிக்ஸ் அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி உதவியாளராக இருக்கும் ராஜேந்திரன் பெற்றுள்ளார்.
பேராசிரியர் குணசேகரின் வழிகாட்டுதலின் கீழ், தொழிலக நுண்ணுயிரியல் குறித்த ஆராய்ச்சியில் ராஜேந்திரன் ஈடுபட்டார். அவரது ஆராய்ச்சி முடிவுகளைப் பாராட்டும் விதமாக தற்போது அவருக்கு ஏஎம்ஐயின் இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications