இந்திய எல்லையில் ஊடுறுவிய இலங்கை படகு பிடிபட்டது
ராமநாதபுரம்: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கைப் படகை கடலோரக் காவல் படையினர் துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் கடலோரக் காவல் படையினர் தினசரி காலையும், மாலையும் என இரு வேளைகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல இன்று காலையும் ஹெலிகாப்டரில் கடலோரக் காவல் படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். உச்சிப்புளி, தனுஷ்கோடி பகுதிகளில் இந்த ரோந்துப் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது தனுஷ்கோடி அருகே இலங்கை கடல் எல்லையிலிருந்து ஒரு படகு வேகமாக இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவிச் சென்றதைக் கண்டனர்.
இதையடுத்து அந்தப் படகை நெருங்கி தாழ்வாகப் பறந்தபடி, துப்பாக்கி முனையில் அந்தப் படகை மடக்கினர். பின்னர் அப்படகை அரிச்சமுனைக்குக் கொண்டு சென்றனர்.
படகில் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அவர்களைப் பிடித்த கடலோரக் காவல் படையினர் அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications