மே 1 முதல் திபெத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சீனாவை எதிர்த்து திபெத்தியர்கள் மிகக் கடுமையாக போராடி வருகின்றனர். தலைநகர் லாசாவில் நடந்த எழுச்சி மிகு போராட்டத்தை ஒடுக்க சீன பாதுகாப்புப் படையினர் எடுத்த அடக்குமுறை நடவடிக்கையால், பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தொடர்ந்து திபெத்தில் மோதல் நிலவி வருகிறது. இதுதவிர உலகெங்கும் உள்ள திபெத்தியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் திபெத்துக்கு போவதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சீன அரசு தடை விதித்தது. இதனால் அங்கு சுற்றுலா கடுமையாக பாதித்தது.
கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கலவரத்தின்போது திபெத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் சாட்சி கூறியதும் இதற்கு காரணமாகும்.
ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்கின்றனர் ஓட்டல், கடை உரிமையாளர்களும், ஏஜென்டுகளும்.
இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டு பயணிகளுக்கு மே 1 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லாசா கலவரம் சுற்றுலா பயணிகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், திபெத்தின் மலை மற்றும் இயற்கை காட்சிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்கிறது சுற்றுலாத் துறை.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications