மருத்துவமனையில் கர்ப்பிணி, குழந்தை பரிதாப சாவு - சாலை மறியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் மற்றும் நர்சுகளின் அலட்சியத்தால் பிரசவ வலியால் துடித்து பெண்ணும், அவருக்குப் பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கொந்தளித்த பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கலைவாணி (21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. கலைவாணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் காலை கலைவாணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது தாய் லல்லி காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு கலைவாணியை அழைத்து சென்றார்.

அட்மிட் ஆன கலைவாணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் டாக்டர்கள் யாரும் வரவில்லை. நர்சுகளிடம் கூறியபோது அப்படித்தான் வலி இருக்கும். டாக்டர்கள் வருவார்கள் என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து லல்லி, நர்சுகளிடம் கேட்டுக் கொண்டே இருந்ததால் அந்த இரக்கற்ற நர்சுகள் கோபத்துடன், லல்லியைத் திட்டியுள்ளனர். இதையடுத்து வேறு ஒரு ஊழியரிடம் டாக்டரின் செல்போன் எண்ணை வாங்கியலல்லி டாக்டருக்குப் போன் செய்து மகள் வலியால் துடிப்பதைக் கூறி உடனடியாக வருமாறு கெஞ்சியுள்ளார்.

டாக்டரும் வருவதாக கூறியுள்ளார். ஆனால் பலமுறை போன் செய்தும் டாக்டர் வரவில்லை.

பகல் முழுவதும் கலைவாணி பிரவச வலியால் அலறித் துடித்துள்ளார். ஆனால் அவரது குரல் அங்குள்ள ஒருவரின் இதயத்தையும் எட்டவில்லை. லல்லியும் பெற்ற வயிறு பதற அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.

மாலையில்தான் டாக்டர் வந்தார். வந்தவர் ஊசி போட்டு விட்டுச் சென்று விட்டார். நள்ளிரவில் மறுபடியும் கலைவாணிக்கு வலி வந்துள்ளது. வலியால் அலறித் துடித்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை.

அதுகுறித்து லல்லி நர்சுகளிடம் கூற, அவர்களோ பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போகுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினார் லல்லி.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதிர்ச்சியடைந்த லல்லி, குழந்தையின் உடலுடன் மீண்டும் மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு கலைவாணியும் சிகிச்சையளிக்கப்படாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவருக்கு வலிப்பும் வந்தது. பதைபதைத்து நின்ற லல்லியிடம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர் நர்சுகள்.

குழந்தையின் உடலை அவர்களிடம் கொடுத்துவிட்டு கலைவாணியை ஸ்டான்லிக்கு மீன் பாடி வண்டியில் வைத்துக் கொண்டு சென்றார் லல்லி.

அங்கு கலைவாணியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதைகேட்ட லில்லி கதறி அழுதார். மகளையும், பேத்தியையும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்று வேதனையில் அலறித் துடித்தார்.

தகலறிந்ததும் அவரது உறவினர்களும் வியாசர்பாடி பொதுமக்களும் எருக்கஞ்சேரி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மகேந்திரன் எம்எல்ஏவும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

போலீஸ் உதவி ஆணையர்கள் ஜெயக்குமார், ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள் மன்னர்மன்னன், சிவமணி, ஸ்டீபன் மற்றும் போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். ஆனால் அவர்கள் சமாதானமடையவில்லை.

இதையடுத்து மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி பிரபாவதி தலைமையில் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில், பலமுறை போன் செய்தும் வராமல் அலட்சியமாக நடந்து கொண்ட, டாக்டர் வசந்தி, இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட நர்சுகள் ராஜலட்சுமி, ஜெயமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரு நர்சுகளும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டாக்டர் வசந்தியிடம் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. டாக்டர் விஜயா தலைமையில் விசாரணைக் குழுவை மேயர் மா.சுப்ரமணியம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+