கர்நாடக சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக போட்டி
சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் நடந்து வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஓகனேக்கல் விவகாரத்தில் எடியூரப்பா தலையிட்டு தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டதால், கூட்டணி முயற்சியை அதிமுக கைவிட்டது.
இந்தநிலையில் கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன்படி 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், அதிமுக ஆட்சிமன்றக் குழு எடுத்த முடிவுப்படி மே மாதம் 10, 16, 22 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்படுகிறது.
மாநில அதிமுக செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணராஜ் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார். தெய்வசகாயம் சாம்ராஜ்பேட்டையில் போட்டியிடுவார்.
ராஜாஜி நகரில் ராமசாமியும், சாந்தி நகரில் வா.புகழேந்தியும், கோலார்தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜும், புலிகேசி நகரில் சாம்ராஜ் என்கிற அன்பரசனும், சிவாஜி நகரில் கே.மூர்த்தியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications